கோவை ஆசிரியருக்கு 'தமிழ் செம்மல்' விருது - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 15, 2021

கோவை ஆசிரியருக்கு 'தமிழ் செம்மல்' விருது

 கோவை ஆசிரியருக்கு 'தமிழ் செம்மல்' விருது


கோவை குனியமுத்துார் பகுதியில் வசித்து வருபவர் அன்வர் பாட்ஷா. கோவை தனியார் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர், ஏழு நுால்களை எழுதி இருக்கிறார். 


திருக்குறளை மாணவர்களுக்கும் எளிமையாக கற்பித்ததோடு, இலக்கிய சொற்பொழிவு வாயிலாக குறள் நெறி கருத்துக்களை பரப்பி வருகிறார்.இவரது இலக்கிய சேவையை பாராட்டி, தமிழக அரசு சார்பில், 2019ம் ஆண்டுக்கான, 'திருவள்ளுவர் விருது' வழங்கப்பட்டது. இப்போது, 2020ம் ஆண்டுக்கான, 'தமிழ் செம்மல்' விருதை அரசு வழங்கியுள்ளது.


 இதுகுறித்து, அன்வர் பாட்ஷா கூறுகையில், ''நான் ஆசிரியராக இருந்த காலத்தில் ஒருநாள் கூட தவறாமல் தினமும் பள்ளியின் கரும்பலகையில் திருக்குறள் எழுதி வந்தேன். குறள் நெறி கருத்துக்களை, மக்களிடம் பரப்புவதுதான் என் பணி,'' என்றார்.

No comments:

Post a Comment