கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!! - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 16, 2021

கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!

 கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது : மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!!


கொரோனா தடுப்பூசியை யாரெல்லாம் போட்டுக் கொள்ளலாம், யார் போடக் கூடாது என மத்திய சுகாதாரத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.


18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.


ஒரு டோஸ் தடுப்பு மருந்து கொடுத்தால் அதன் பிறகு 14 நாட்கள் கழித்தே அடுத்த டோஸ் கொடுக்க வேண்டும்.


* முதல் டோசில் எந்த வகை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதோ, அதே தடுப்பு மருந்துதான் இரண்டாவது டோசிலும் கொடுக்கப்பட வேண்டும். தடுப்பு மருந்துகளை மாற்றி கொடுக்கக் கூடாது.


* குறிப்பிட்ட மருந்துகள், உணவுப் பொருட்கள், தடுப்பு மருந்துகள் அல்லது ஊசி மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படக் கூடியவர்கள், கொரோனா தடுப்பு மருந்து முதல் டோசின் போது ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடக் கூடாது.


* காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாய் சரியான இடைவெளியில் இல்லாதவர்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு உடையவர்கள் தடுப்பூசி போடக்கூடாது.


கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போடக் கூடாது.


* கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்கள், நோயால் உடல்நலம் குன்றி மருத்துவமனைகளில் இருப்பவர்கள் தடுப்பூசி போடக் கூடாது


* ரத்தப்போக்கு அல்லது ரத்தம் உறைதல் கோளாறு உள்ளவர்களுக்கு தடுப்பூசியை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும்.


* நோய்த்தொற்றின் (செரோ-பாசிட்டிவ்) அல்லது ஆர்டி-பி.சி.ஆர் பாசிடிவ் கொண்டவர்கள், நாட்பட்ட நோய்கள் (இருதய, நரம்பியல், நுரையீரல், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதிப்பு), நோயெதிர்ப்பு பாதுகாப்பு, எச்.ஐ.வி பாதிப்பு கொண்டவர்களை அதிக கவனத்தில் கொண்டு தடுப்பூசி கொடுக்கலாம்.

No comments:

Post a Comment