வினாத்தாள் வெளியான வழக்கில் பேரம் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 30, 2021

வினாத்தாள் வெளியான வழக்கில் பேரம் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது

 வினாத்தாள் வெளியான வழக்கில் பேரம் பேசியிருப்பது தெரிய வந்துள்ளது


பெங்களூரு: அரசு முதல் நிலை உதவியாளர் பணியின் தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில், ஒவ்வொருவரிடமும், பத்து லட்சம் ரூபாய் பேரம் பேசியிருப்பதும், சிலரிடம், காசோலைகள், கல்வி சான்றிதழ்கள் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.கர்நாடக அரசின் முதல் நிலை உதவியாளர் பணிக்கு, கடந்த, 24 ல் தேர்வு நடக்கவிருந்தது. அப்போது, வினாத்தாள் கசிந்ததால், திடீரென தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.இது தொடர்பாக, இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட, 24 பேர் கைது செய்யப்பட்டனர். 


அவர்களிடம் நடத்திய விசாரணையில், பலரது, எஸ்.எஸ்.எல்.சி., ~ பி.யு.சி., இரண்டாம் ஆண்டு அசல் கல்வி சான்றிதழ்கள் கைப்பட்டன.மேலும், பணம் கொடுக்க மறுத்தவர்களிடம், காசோலைகள் மூலம், வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.வினாத்தாள் கசிவு செய்தோரில் முக்கிய நபர்களான ராச்சப்பா, சந்துரு ஆகியோர், கமிஷன் பணத்துக்காக, ஒவ்வொரு நபரிடமிருந்து, 10 லட்சம் ரூபாய், 'டீல்' பேசி உள்ளனர்.பணம் கைக்கு வந்ததும், இருவரும், 


தலா, ஐந்து லட்சம் ரூபாய் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். காலி காசோலைகள் பெற்றும், தேர்வு முடிந்த பின், பத்து லட்சம் ரூபாய் எழுதி பெற்று கொள்ளவிருந்ததும் தெரியவந்தது.இது தொடர்பாக, பெங்களூரு உல்லாலில் உள்ள, சந்துரு வீட்டிலிருந்து நுாற்றுக்கணக்கான காசோலைகள்; ஐந்து பேரின் கல்வி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கிடையில், இவ்விருவருக்கும் சில உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆதரவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment