அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி: ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று சமுதாய வானொலி தொடக்க விழா நடந்தது. அதனைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மெய்நிகர் முறையில் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''சமுதாய வானொலி உள்ளூர் பகுதி மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குகிறது. மத்திய, மாநில அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
மேலும், உள்ளூர் மக்களின் தனித்துவம் மிக்க பண்பாட்டு மரபுகளையும், சமுதாயப் பொருளாதார நடவடிக்கைகளையும் ஆவணப்படுத்த உதவுகிறது. இந்திய அளவில் உள்ள 310 சமுதாய வானொலி நிலையங்களில் தமிழகத்தில் 40 உள்ளன. இதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது'' என்று ஆளுநர் தெரிவித்தார்
தொடர்ந்து உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ''தமிழகத்தில் சமுதாய வானொலி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடுத்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்தான் தொடங்கப்படுகிறது. சமுதாய வானொலி உள்ளூர் மக்களையும் பல்கலைக்கழத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகத் திகழ்கிறது'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment