பள்ளிக்கு பாதுகாப்பாக வர அழைப்பு விடுத்து மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

பள்ளிக்கு பாதுகாப்பாக வர அழைப்பு விடுத்து மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

 பள்ளிக்கு பாதுகாப்பாக வர அழைப்பு விடுத்து மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்


பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு முகக்கவசம், இனிப்பு வழங்கி, பள்ளிக்கு பாதுகாப்பான முறையில் வர அழைப்புவிடுத்தனர்.


பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 


ஏழை, எளிய மாணவர்க ளுக்கு உதவி செய்வதில் சிறந்த முன்னுதாரணமாக திகழும் இப்பள்ளி யைச் சேர்ந்த ஆசிரியர் கள், கரோனா ஊரடங்கின்போது பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக தங்களது சொந்த செலவில் அனை வருக்கும் ஆன்ட்ராய்டு செல் போன்கள் வாங்கிக் கொடுத்தனர்


இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜன.19-ம் தேதி முதல் பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்பு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


இதையடுத்து, இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை பைரவி, ஆசிரியர்கள் செல்வராஜ், சுரேஷ் ஆகியோர் நேற்று எளம்பலூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு முகக் கவசம் மற்றும் இனிப்புகள் வழங்கி, பள்ளிக்கு பாதுகாப் பான முறையில் வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

No comments:

Post a Comment