மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 12, 2021

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

 மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு


மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி துவங்கி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர், பொதுப்பிரிவினர் என அனைத்து பிரிவினருக்கும் டிசம்பர் 24ம் தேதி முதற்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, 2ம் கட்ட கலந்தாய்வு கடந்த 4ம் தேதி துவங்கியது.


 முதல்நாளில், 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி  மாணவர்களுக்கு 23 எம்பிபிஎஸ் இடங்களும்,  24 பிடிஎஸ் இடங்களும் என மொத்தம் 47 இடங்கள் முதல்நாள் கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.


முதல்கட்ட கலந்தாய்வின்போது, சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்தும், சேர்க்கை ஆணை பெறாமல் வெளியேறிய  மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஈரோட்டை சேர்ந்த இலக்கியா, கடலூரை சேர்ந்த சவுமியா  மற்றும் தர்ஷினி ஆகிய 3 மாணவிகளுக்கு மருத்துவ கல்வி இயக்ககம் சேர்க்கை ஆணையை வழங்கியது. 


இதனை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி காலை வரை பொதுப் பிரிவினர் மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்தது. அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி மதியம் முதல் இன்று மாலை வரை மேனேஜ்மென்ட் பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. 2ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது.

No comments:

Post a Comment