எல்லையோர பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, January 21, 2021

எல்லையோர பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி

 எல்லையோர பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி


எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள, 1,100க்கும் மேற்பட்ட பள்ளிகளில், மாணவர்களுக்கு தேசிய மாணவர் படைக்கான பயிற்சி வழங்கப்படும்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


டில்லியில் நடக்கும் தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:தேசிய மாணவர் படையை விரிவுபடுத்த, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். 


இதையடுத்து, எல்லை மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள, 1,100க்கும் அதிகமான பள்ளிகளில், தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்படும். இப்படையில், 28 சதவீத அளவிற்கே இருந்த மாணவியரின் பங்களிப்பு, தற்போது, 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.


வேலைவாய்ப்பில், தேசிய மாணவர் படையில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்கவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment