மக்களிடம் கருத்து கேட்பு: பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 5, 2021

மக்களிடம் கருத்து கேட்பு: பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு

 மக்களிடம் கருத்து கேட்பு: பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு


தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இருப்பினும் பெற்றோரிடம் கருத்து கேட்ட பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, 8ம் தேதி பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகம் முழுவதும் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க அந்தந்த பகுதியில் உள்ள மேனிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கூட்டம் நடத்தவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து, அதன்பேரில், கூட்டம் நடத்தப்படும் இடங்கள் குறித்தும் அங்கு செய்ய வேண்டிய கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பள்ளிக் கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


 இதன் தொடர்ச்சியாக சென்னை நகரில் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ள பள்ளிகளில் தற்போது என்ன நிலைமை இருக்கிறது.


அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிய பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர்கள் கொண்டு ஆய்வுக் குழு நேற்று காலை எம்ஜிஆர் நகர் அரசு மேனிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment