வட்டார கல்வி அலுவலகத்தை புதுப்பித்த பிறகும் பணிக்கு செல்ல ஊழியர்கள் மறுப்பது ஏன்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, January 2, 2021

வட்டார கல்வி அலுவலகத்தை புதுப்பித்த பிறகும் பணிக்கு செல்ல ஊழியர்கள் மறுப்பது ஏன்?

 வட்டார கல்வி அலுவலகத்தை புதுப்பித்த பிறகும் பணிக்கு செல்ல ஊழியர்கள் மறுப்பது ஏன்?


திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பிடிஓ அலுவலக வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கல்வி அலுவலகம் பாழடைந்த நிலையில் இருந்தது.  இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் கொடுத்தபோது, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.


 இதையடுத்து ஊராட்சி தலைவர் சித்ரா ரமேஷ், தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் முழுவதும் சீரமைத்து வண்ணம் பூசி அனைத்து வசதிகளும் செய்தார். 


அதற்கு பிறகும், அலுவலகத்துக்கு வர வட்டார கல்வி அலுவலர் மற்றும் ஊழியர்கள் மறுக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பிடிஓ அலுவலக வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment