அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மதுரை மருத்துவ மாணவி முதலிடம் - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, January 13, 2021

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மதுரை மருத்துவ மாணவி முதலிடம்

 அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மதுரை மருத்துவ மாணவி முதலிடம்


அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.


மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த மாணவி சி.கவி ரக்ஷனா. இவர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.


அண்மையில், டெல்லியில் நடந்த அகில இந்திய பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிளில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளவேனில் என்ற பெண்ணை (குஜராத்துக்காக விளையாடுகிறார்) மூன்றாம் இடம் தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.


கவி ரக்ஷனாவிடம் தோல்வியடைந்த இளவேனிக்கு குஜராத் அரசு ஆண்டிற்கு பத்து லட்சம் நிதியுதவி, தனிப்பட்ட இரண்டு பயிற்சியாளர்களை வழங்கி ஊக்கவித்து வருகிறது.


ஆனால், அரசு மற்றும் தனியாரின் எந்த ஸ்பான்சர் உதவியும் இல்லாமல் கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரைக்காகவும், தமிழகத்திற்காகவும் கவி ரக்ஷனா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், சிறப்பிடங்களையும் பெற்றுள்ளார்.


தற்போது தேசிய அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். ஆனாலும் தமிழக அரசின் விளையாட்டுத் துறை இவரை இதுவரை அங்கீகாரம் செய்யவில்லை. எனவே தனது மகள் கவி ரக்ஷனாவுக்கு உதவ வேண்டும் என்று தந்தை டாக்டர் சக்கரவர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment