ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’ - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, January 26, 2021

ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’

 ரயில்வே ஆட்சேர்ப்பு வினாத்தாள் ‘அவுட்’


சூரத்: மேற்கு ரயில்வே துறை சார்பில் கடந்த 3ம் தேதி ஜூனியர் கிளார்க் மற்றும் கமர்ஷியல் கிளார்க் பதவிகளுக்கு என்.டி.பி.சி மற்றும் டி.சி.எஸ் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.


 சுமார் 12 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை ஆன்லைனில்  வழங்கினர். குஜராத்  மாநிலம் சூரத்தில் சுமார் இரண்டரை ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதினர். ஆனால் இந்த தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு முந்தைய 7 மணி நேரத்திற்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் லீக் ஆனது. இந்த மோசடி  குறித்து கடந்த 21ம் தேதி ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தெரியவந்தது


அதையடுத்து மேற்கு ரயில்வே விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில், என்.டி.பி.சி மற்றும் டி.சி.எஸ் ஆகிய தனியார் அமைப்பின் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இவர்கள் ஒரு போலி வலைத்தளத்தை உருவாக்கி  வினாத்தாளை லீக் செய்துள்ளனர். ஒரு வினாத்தாள் ரூ. 5 லட்சம் என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

< >

 இதுதொடர்பாக, சாவர்குண்ட்லா பகுதியில் செயல்படும் என்டிபிசி மற்றும் டிசிஎஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்ட நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, அங்கு பணியாற்றிய 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment