தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள் - Minnal Kalvi Seithi

Breaking

Friday, January 1, 2021

தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள்

 தமிழகத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள்


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட சென்னையில் 3 இடங்களிலும் , நீலகிரி அரசு மருத்துவமனை உட்பட நீலகிரி மாவட்டத்தில் மூன்று இடங்களிலும் , நெல்லை மாவட்டத்தில் மூன்று இடங்கள் என 11 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.


கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் இன்று (ஜன.2) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்களில் இந்த ஒத்திகை நடக்க உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இன்று முதல் இந்த ஒத்திகை முகாம்கள் தொடங்குகிறது. தமிழகத்தில் 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் ஆகிய 11 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது.


முதற்கட்டமாக 25 நபர்களை வைத்து இன்று காலை 9 மணிக்கு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  இதற்காக, அரசு மருத்துவமனையில் இருக்கும் செவிலியர்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment