ஜிப்மர் சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, January 5, 2021

ஜிப்மர் சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி

 ஜிப்மர் சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி


காரைக்கால் ஜிப்மர் கல்லூரியில் நிரம்பாத இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜனவரி 6) கடைசித் தேதி ஆகும்.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, காரைக்கால் பிரிவில் மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு முடிந்த நிலையில், மீதமுள்ள நிரப்பப்படாத 19 எம்பிபிஎஸ் இடங்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜனவரி 7 முதல் 15-ம் தேதி வரை நடக்கிறது.


நீட் தேர்வில் 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவக் கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் ( https://www.mcc.nic.in/ ) விண்ணப்பிக்க, நாளை ( 6-ம் தேதி) கடைசி ஆகும். புதுச்சேரி மாணவர்கள் விண்ணப்பித்தால், கலந்தாய்வின்போது அசல் கல்வி, இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றிதழ்களைக் கொண்டு செல்ல வேண்டும்.


கலந்தாய்வில் பல்வேறு பிரிவினருக்கான தோராய கட்-ஆஃப் மதிப்பெண் 690 முதல் 597 வரை ஆகும். ஆஃப்லைன் முறையில் சிறப்புக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியின் பிரிவான காரைக்கால் ஜிப்மரில் ஆண்டுக்கு ரூ.12,600 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment