ஆசிரியர் பணி வரன்முறை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 30, 2021

ஆசிரியர் பணி வரன்முறை

 ஆசிரியர் பணி வரன்முறை


ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தனியே மேற்கொள்ள அவசியமில்லை' என தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துஉள்ளது.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் பழனிச்சாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கடந்த 2009~ ~ 10ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை.


தற்காலிக அடிப்படையில் வழங்கப்படும் நியமனங்களுக்கும் நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணி வரன்முறை செய்யப்பட வேண்டும்.


எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணி பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment