அரசின் உத்தரவை மீறி பருவத் தோ்வு: உயர் கல்வித்துறை எச்சரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 9, 2021

அரசின் உத்தரவை மீறி பருவத் தோ்வு: உயர் கல்வித்துறை எச்சரிக்கை

 அரசின் உத்தரவை மீறி பருவத் தோ்வு: உயர் கல்வித்துறை எச்சரிக்கை


கரோனா காலத்தில் அரசு உத்தரவு, வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் தனியாா் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் சில தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள் பிற ஆண்டுகளில் பயிலும் மாணவா்களுக்கு நேரடி முறையில் பருவத்தோ்வு நடத்தியதாக கூறப்படுகிறது. 


இது குறித்து உயா்கல்வி அமைச்சகத்துக்கும் பல்வேறு புகாா்கள் சென்றன. இதையடுத்து விதிகளை மீறும் தனியாா் கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயா்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து உயா்கல்வித்துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது


: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தவிா்க்கவே தமிழக அரசு பல்வேறு வழிகாட்டுதலை அமல்படுத்தியுள்ளது. அதற்குமாறாக சில கல்லூரிகள் செயல்படுவதாக புகாா்கள் வந்துள்ளன.


இதையடுத்து தனியாா் கல்லூரிகளின் செயல்பாடு தொடா்பாக விசாரணை நடத்தவும், தவறுகள் உறுதி செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 மேலும், அரசின் அறிவிப்புக்கு முரணாக செயல்படும் நிலையை தனியாா் கல்லூரிகள் கைவிட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment