சிவில் சர்வீஸ் தேர்வு மீண்டும் எழுத முடியாது: மத்திய அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 22, 2021

சிவில் சர்வீஸ் தேர்வு மீண்டும் எழுத முடியாது: மத்திய அரசு அறிவிப்பு

 சிவில் சர்வீஸ் தேர்வு மீண்டும் எழுத முடியாது: மத்திய அரசு அறிவிப்பு


புதுடில்லி: 'சிவில் சர்வீஸ்' முதல் நிலை தேர்வை, கடைசி முறையாக கடந்த ஆண்டு எழுத முடியாதவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பளிக்க, மத்திய அரசு மறுத்துள்ளது.யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும், இந்திய ஆட்சிப் பணியான, ஐ.ஏ.எஸ்., இந்திய வெளியுறவு பணியான, ஐ.எப்.எஸ்., இந்திய போலீஸ் பணியான, ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது.கடந்த ஆண்டு முதல் கட்ட தேர்வு, மே, 31ல் நடக்க இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, அக்., 4ல் நடந்தது.


இந்நிலையில், ரச்சனா சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத, எனக்கு கடந்த ஆண்டு தான் கடைசி வாய்ப்பாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, தேர்வை எழுத முடியவில்லை. என்னை போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், முதல் நிலை தேர்வை எழுத, எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


கடந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'கொரோனாவால் தேர்வு எழுத முடியாமல்போன, கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது' என்றார். இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பணியாளர் நலத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கடந்த ஆண்டு கடைசி முறையாக முதல் நிலை தேர்வு எழுதாதவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் எண்ணம் இல்லை. இது பற்றி பதில் மனு தாக்கல் செய்ய, அவகாசம் தேவை' என்றார். இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை, 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment