படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, January 16, 2021

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு

 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு


படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. 


மாற்றுத் திறனாளிகளுக்கு 1 முதல் 10ஆம் வகுப்புவரை படித்தவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவடைந்தால் போதும். பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.


 எம்பிசி, பிசி (முஸ்லிம்), ஓபிசி, ஓசி வகுப்பினர் 40 வயது, எஸ்சி, எஸ்டி, எஸ்சி (அருந்ததியர்) 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு இல்லை. விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். 


மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக்கூடாது.


மேற்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள வருவாய் ஆய்வாளர் சான்று, கல்விச்சான்று நகல், சாதிச்சான்று நகல் மற்றும் தேகியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment