துணைவேந்தர் பதவி: வெளிமாநில பேராசிரியர்கள் விண்ணப்பம்: பல்கலை பேராசிரியர்கள் அதிர்ச்சி - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, January 24, 2021

துணைவேந்தர் பதவி: வெளிமாநில பேராசிரியர்கள் விண்ணப்பம்: பல்கலை பேராசிரியர்கள் அதிர்ச்சி

 துணைவேந்தர் பதவி: வெளிமாநில பேராசிரியர்கள் விண்ணப்பம்: பல்கலை பேராசிரியர்கள் அதிர்ச்சி


திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தவர் பதவிக்கு, வெளிமாநில பேராசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதால், பல்கலை பேராசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மணிசங்கரின் பதவிக்காலம் கடந்த, 7ம் தேதி முடிந்தது. பல்கலையின் அன்றாட பணிகளை கவனிக்க, உயர்கல்வித் துறை செயலர் தலைமையில், துணைவேந்தர் பொறுப்புக்குழு ஏற்படுத்தப்பட்ட போதும், துணைவேந்தரின் பணியை நீட்டித்து, கவர்னர் உத்தரவிட்டார். 


இந்நிலையில், துணைவேந்தர் தேர்வு குழு, புதிய துணைவேந்தர் தேர்வு செய்யும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க, ஜன., 12 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. 143 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில், 27 விண்ணப்பங்கள், மேற்கு வங்கம், கர்நாடகா, டில்லி, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர்களிடம் இருந்து வந்துள்ளன. 


இவர்களில் சிலர் மட்டும், பணி நிமித்தமாக வெளிமாநிலங்களில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆவர். ஏற்கனவே, சென்னை அண்ணா பல்கலைக்கு, கர்நாடகாவைச் சேர்ந்த சுரப்பா, துணைவேந்தராக நியமிக்கப்பட்டதில், பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளது, பல்கலை பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment