அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, January 4, 2021

அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்

 அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்


தமிழக அரசு, 'சி' மற்றும், 'டி' பிரிவு ஊழியர்களுக்கு, 3,000 ரூபாய்; சத்துணவு ஊழியர்களுக்கு, 1,000 ரூபாய், பொங்கல் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையையொட்டி, 'சி' மற்றும், 'டி' பிரிவு அரசு பணியாளர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு, பொங்கல் போனஸ் வழங்கப்படும்.


 உச்சவரம்பு


அந்த வகையில் இந்த ஆண்டு, 'சி' மற்றும், 'டி' பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும், காலமுறை சம்பளம் பெறும் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு, உச்சவரம்பாக, 3,000 ரூபாயை, போனஸ் வழங்க, அரசு ஆணையிட்டுள்ளது.


அதேபோல், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வந்த, சத்துணவு திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அங்கன்வாடி பணியாளர்கள். குறு அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் போன்றோருக்கு, ௧,௦௦௦ ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 ஓய்வூதியர்கள் ஓய்வு பெற்ற, 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியாளர்கள், மானியம் பெற்ற கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள், உதவியாளர்கள். சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என, அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு, பொங்கல் பரிசு தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment