1 முதல் 8 ம் வகுப்பு வரை ALL PASS வழங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Friday, February 19, 2021

1 முதல் 8 ம் வகுப்பு வரை ALL PASS வழங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 1 முதல் 8 ம் வகுப்பு வரை ALL PASS வழங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை குறித்த விபரம், 25ல் தெளிவாக அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில்,  அவர் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வை, தமிழகத்தில் எத்தனை லட்சம் தேர்வர்கள் எழுதவுள்ளனர் என்ற விபரம் அடங்கிய பட்டிலை, துறை ரீதியாக வரும், 24ல், என்னிடம் ஒப்படைக்க உள்ளனர். ஒரு அறைக்கு, 20 தேர்வர் முறையில், ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 எனவே, எத்தனை தேர்வர் எழுதவுள்ளனர் என்ற விபரத்தை, வரும், 25ல் துறை ரீதியாக, தெளிவாக அறிவிக்கப்படும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். 


ஒன்பது முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, இறுதித்தேர்வு நடத்துவதா அல்லது ஆல்பாஸ் முறையா என்பதை பொறுத்திருந்தே முடிவு செய்ய முடியும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்வது எளிதான காரியமல்ல. 


கல்விச்சேனல் மூலம் கல்வி போதிப்பதால், பிற மாநிலங்களை காட்டிலும், தமிழக மாணவர்களிடம் கற்றல் திறன் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்

No comments:

Post a Comment