356 பேருக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு - Minnal Kalvi Seithi

Breaking

Sunday, February 14, 2021

356 பேருக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு

 356 பேருக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு


பள்ளிக் கல்வித் துறையில் முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு பெற்ற 356 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு வழங்குவதற்கான கலந்தாய்வு சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.


 இதில் பொருளியல், வரலாறு, வணிகவியல் உள்பட பல்வேறு பாடங்களை கற்பிக்கும் 519 ஆசிரியா்கள் பங்கேற்றனா். அவற்றில் 356 பேருக்கு முதுநிலை ஆசிரியராகப் பதவி உயா்வு பெற்ற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக கலந்தாய்வு நடைபெற்ற பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் சில ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணையை அவா் வழங்கினாா்.

No comments:

Post a Comment