6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, February 10, 2021

6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


இன்றைய சூழலில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அவர், பள்ளிக்கு வரும் மாணவர்களின் விழுக்காடு 98.5 சதவிகிதமாக இருப்பதாக குறிப்பிட்டார்.


9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை என்ற அமைச்சர் செங்கோட்டையன், அதற்கு பதிலாக 6முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இன்றைய சூழ்நிலையில் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது 98.5 மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றன என அவர் தெரிவித்தார்.


6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் டேப் வழங்கப்படும் என கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்ததால் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது


பின்னர், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் நலன்கருதி இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு 40% பாடத்திட்டம் குறைக்கப்பட்டது.


இதைதொடர்ந்து 6,7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா என தகவல் வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. Why sir? please open the school because our brothers always using the phone when he go to school now only the students are studying please open the school. Request for our parents 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete