84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 11, 2021

84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

 84 வகை பதிவேடுகள் பராமரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு


பள்ளி கல்வி அலுவலகங்களில், 84 வகை பதிவேடு மற்றும் கோப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து, பள்ளி கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பள்ளி கல்வி முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் இதர அலுவலகங்களில், பள்ளி நிர்வாகம் தொடர்பாக, 84 வகை பதிவேடுகளையும், கோப்புகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.


பணியாளர் விதிகள், ஊதிய விதிகள், கட்டட பராமரிப்பு, அரசு ஊழியர்களின் சலுகை விபரங்கள், மாணவர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள், ஆசிரியர்களின் பணி விபரங்கள், மாணவர்களுக்கான தேர்வு நடத்துதல்.சான்றிதழ் வழங்கல், விளையாட்டு, தொழிற்கல்வி, உள்கட்டமைப்பு, தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் குறித்த பதிவேடுகளை, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

2 comments:

  1. Only record maintenance is enough for government schools. Super rule. Vaaaaazhga tamizhagam

    ReplyDelete