பிப். 8 முதல் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, February 4, 2021

பிப். 8 முதல் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு

 பிப். 8 முதல் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch., ஆகிய படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.


2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ஆம் தேதியும், 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதியும் தொடங்கும்.


மாணவர்களுக்கான விடுதிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று M.E., M.tech., MBA, MCA, M.Sc., ஆகிய படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment