பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம் - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 11, 2021

பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம்

 பொது தேர்வு விபரம் பதிவேற்ற பள்ளிகளுக்கு அவகாசம்


சென்னை:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்காக, மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டித்து, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, பள்ளிகள் வழியாக அரசு தேர்வு துறைசேகரித்துள்ளது.அதேபோல, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் விபரங்களை, பிப்., 1 முதல் இன்றைக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு, அரசு தேர்வுத் துறைஅறிவுறுத்தியது.பெரும்பாலான பள்ளிகள், இந்த பணிகளை முடிக்கவில்லை.


நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், பெரும்பாலான பள்ளிகள் மாணவர் விபரங்களை பதிவேற்றுவது, தேர்வு கட்டணம் செலுத்துவது போன்ற நடைமுறைகளை முடிக்க முடியாத நிலைஏற்பட்டது.இந்நிலையில், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


எனவே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான விபரங்களை, இணையதளம் வழியே பள்ளிகள் தரப்பில் பதிவேற்றம் செய்வதற்கும், கட்டணம் செலுத்துவதற்கும் வரும், 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment