அரசு பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியங்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 19, 2021

அரசு பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியங்கள்

 அரசு பள்ளியில் மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியங்கள்


வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்கள் வழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வருகின்றனர். 


வாலாஜாபாத் ஒன்றியம் அய்மண்சேரி ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணத்தால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது-


 இதில் ஒருசில மாணவர்கள், தங்களது கலைத்திறனை வளர்க்கும் வகையில், நேரத்தை வீணாக்காமல், பள்ளி வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர்களில் சுற்றுச்சூழல், சுகாதாரம், மரம் வளர்த்தல் உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தும் வகையில், கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தி வருகின்றனர்


அவர்களின் ஓவியத் திறமைகளுக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் கருத்துரு கொடுத்து, அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். 


தங்களின் ஓய்வு நேரத்தை வீணாக்காமல், சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு பயன்பாடுகளை விளக்கும் மாணவர்களின் ஓவியங்களை கண்டு கிராம மக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment