அண்ணாமலை மருத்துவ கல்லூரிகள்; அரசு ஏற்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, February 5, 2021

அண்ணாமலை மருத்துவ கல்லூரிகள்; அரசு ஏற்பு

 அண்ணாமலை மருத்துவ கல்லூரிகள்;  அரசு ஏற்பு


அண்ணாமலை பல்கலையின், மருத்துவ கல்லூரிகளை, அரசு ஏற்பதற்கான சட்டத் திருத்தம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


அண்ணாமலை பல்கலையின் கீழ் இயங்கிய, ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லுாரி ஆகியவை, தமிழக சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இதற்கான சட்டத் திருத்தம், நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


இதன்படி, மேற்கண்ட மூன்று மருத்துவ கல்லூரிகளும், அண்ணாமலை பல்கலையின் கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளன.இதற்காக, அண்ணாமலை பல்கலை மற்றும் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகள், உயர் கல்வித் துறையிடம் இருந்து, சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment