மருத்துவ கல்லூரிகள் மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 20, 2021

மருத்துவ கல்லூரிகள் மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல்

 மருத்துவ கல்லூரிகள் மீது சி.பி.ஐ.,குற்றப்பத்திரிகை தாக்கல்


புதுச்சேரி : புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 


இது குறித்து புதுச்சேரி பெற்றோர் மாணவர் நலச்சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை:


கடந்த 2017~18ம் ஆண்டு எம்.டி., ~ எம்.எஸ்., மருத்துவ படிப்பில் சென்டாக் மாணவர்களுக்கு சீட் கொடுக்காமல், குறைந்த மதிப்பெண் எடுத்த வெளி மாநில மாணவர்களுக்கு மருத்துவ கல்லுாரிகள் சீட் ஒதுக்கின.


இதுகுறித்து எமது சங்கம், ஆதாரங்களுடன் சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்தது. இவ்வழக்கில் சி.பி.ஐ., தற்போது புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment