திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 2, 2021

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

 திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கூறிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள்


தமிழக அரசின் நடவடிக்கையை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்ததற்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.


தி.மு.க., தலைமை அறிக்கை:புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019ம் ஆண்டில் போராட்டம் நடத்திய, 6,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுத்தது.


இதற்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து, தமிழக அரசுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்து வந்த நிலையில், தமிழக அரசு, தற்போது ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற்றுள்ளது.


எனவே, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து, தங்கள் மீதான நடவடிக்கைகளை, தமிழக அரசு ரத்து செய்ய, தொடர்ந்து அழுத்தம் கொடுத்தற்காக நன்றி தெரிவித்தனர்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment