அரசு பள்ளி வகுப்பறையில் பட்ஜெட் நேரலையை ஒளிபரப்பிய ஆசிரியர்: சிறப்பாக பதில் சொல்வோருக்கு ரொக்கப் பரிசும் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, February 2, 2021

அரசு பள்ளி வகுப்பறையில் பட்ஜெட் நேரலையை ஒளிபரப்பிய ஆசிரியர்: சிறப்பாக பதில் சொல்வோருக்கு ரொக்கப் பரிசும் அறிவிப்பு

 அரசு பள்ளி வகுப்பறையில் பட்ஜெட் நேரலையை ஒளிபரப்பிய ஆசிரியர்: சிறப்பாக பதில் சொல்வோருக்கு ரொக்கப் பரிசும் அறிவிப்பு


மதுரை மாவட்டம், பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கலை மாணவர்கள் நேரலையாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.


பொருளாதார ஆசிரியர் கா. சுரேஷ் நிதிநிலை அறிக்கை குறித்தும், அதன் ஒவ்வொரு கூறுகளை பற்றியும் மாணவர் களுக்கு விளக்கினார்


பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவர்கள் இந்தச் சிறப்பு வகுப்பில் கலந்துகொண்டனர். தனியார் பள்ளிகளே செய்யாத விஷயத்தை செய்த ஆசிரியரை தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.


இதுகுறித்து ஆசிரியர் கா.சுரே ஷ் கூறியதாவது:


 மத்திய பட்ஜெட் தொடர்பாக மாணவர்களுக்கு நல்ல புரிதலைத் தரும் என்பதால், இந்த ஏற்பாட்டைச் செய்தோம். பொதும்பு பள்ளி ஆய்வகத்துக்கு தமிழக அரசு 20 கணினிகள், ஒரு பெரிய கணினித் திரையை வழங்கியுள்ளது.


 இணைய இணைப்புடன் கூடிய பெரிய திரையில் பட்ஜெட் உரையை ஒளிபரப்பப் பயன்படுத்தினோம். இந்த பட்ஜெட் அறிவிப்புகளில் இருந்து இன்று மாணவர்களிடம் கேள்விகளைக் கேட்டு, சிறப்பாக பதில் அளிக்கும் இருவருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றார்

No comments:

Post a Comment