உயர் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, February 16, 2021

உயர் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு

 உயர் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு


பெங்களூரு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள், குளறுபடிகள் தொடர்பாக, உயர் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


 விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி, துணை வேந்தர் உட்பட, அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.பெங்களூரு பல்கலைக்கழகம், பல விஷயங்களில் விதிமீறலாக நடந்துள்ளது. பேராசிரியர்கள், ஊழியர்களின் இடமாற்றத்தில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.


கர்நாடக பல்கலைக்கழக சட்டம் - 2000 ன் படி, சிண்டிகேட் கூட்டங்கள் நடப்பதில்லை.பல்கலைக்கழகத்தின், 58 பிரிவுகளுக்கு, தலைவர்களை சட்டவிரோதமாக நியமித்தது; பல்கலைக்கழக நிர்வாகத்தின், அபிவிருத்தியை மனதில் கொண்டு, அமைக்கப்பட்ட துணை கமிட்டிகளில், துணை வேந்தர் தன்னிச்சையாக முடிவெடுப்பது;


பல்கலைக்கழகத்தில், அடிப்படை வசதிகள் பிரச்னை, பட்டமளிப்பு நிர்ணயித்த நேரத்தில் நடத்தப்படாதது; ஊழியர்களை துணை வேந்தர், அதிகாரிகள் சரியாக நடத்தாதது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, பெங்களூரு பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், 15 நாட்களாக போராட்டம் நடத்தினர். 


இதை கவனித்த உயர் கல்வித்துறை, தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தனித்தனி கமிட்டி அமைத்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.கமிட்டிகளின் விசாரணைக்கு, முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும்படி, துணை வேந்தர், அதிகாரிகளுக்கு, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment