பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் செய்த உதவிகள் என்னென்ன? - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, February 11, 2021

பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் செய்த உதவிகள் என்னென்ன?

 பள்ளிகளுக்கு தன்னார்வலர்கள் செய்த உதவிகள் என்னென்ன?


திண்டுக்கல்லில் அரசு பள்ளிகளில் தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவரம் சேகரிக்கும் பணி நடக்கிறது.


தன்னார்வ அமைப்புகள், முன்னாள் மாணவர் சங்கம், தனியார் நிறுவனங்கள் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளுக்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றனர். 


இதன் மூலம் சில பள்ளிகள் முன் மாதிரி பள்ளிகளாவும் மாறியுள்ளன. அதே சமயம் இன்னும் சில பள்ளிகளுக்கு இச்சேவை சென்றடையாத நிலை உள்ளது.


இந்நிலையில் கிராமப்புற பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் புள்ளி விவரங்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் தன்னார்வலர்கள் மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள், செலவிடப்பட்ட தொகைகள் குறித்து விவரங்களை சேகரித்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment