அரசு பள்ளிகளில் நவீன எல்இடி பல்ப், ஃபேன் - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, February 13, 2021

அரசு பள்ளிகளில் நவீன எல்இடி பல்ப், ஃபேன்

 அரசு பள்ளிகளில் நவீன எல்இடி பல்ப், ஃபேன்


குறைந்த மின்செலவில் இயங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்இடி பல்ப், ஃபேன்களை பல்வேறு இடங்களில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் பொறுத்துவதற்கான நடவடிக்கையில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


 இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் மின்சாதனங்கள் பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவையாகும்.


தற்போதுள்ள நவீன மின்பல்புகளை பயன்படுத்தினால் மின்சிக்கனத்தை ஏற்படுத்த முடியும். எனவே அதன் ஒருபகுதியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள பழைய மின்சாதனங்களை நீக்கிவிட்டு, புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சாதனங்களை பொருத்துவதற்கான பணியினை வாரியம் மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment