'ஆய்வகங்கள், நூலகங்களை வகுப்பறையாக பயன்படுத்தலாம்': CEO உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, February 5, 2021

'ஆய்வகங்கள், நூலகங்களை வகுப்பறையாக பயன்படுத்தலாம்': CEO உத்தரவு

 'ஆய்வகங்கள், நூலகங்களை வகுப்பறையாக பயன்படுத்தலாம்': CEO உத்தரவு


மதுரையில் ஒன்பது மற்றும் பிளஸ் 1ல் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் ஆய்வகங்கள், நூலகங்களை வகுப்பறைகளாக பயன்படுத்தலாம்,' என கல்வித்துறை தெரிவித்துள்ளது.


பிப்.,8 முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் துவங்குகின்றன. அதையொட்டி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் சி.இ.ஓ., சுவாமி நாதன் தலைமையில் நடந்தது.சி.இ.ஓ., பேசியதாவது: வகுப்பறைக்கு தலா 25 மாணவர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும். 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிகளில் ஆய்வகங்கள், லேப்கள், அரங்கங்களை வகுப்பறையாக பயன்படுத்தலாம். 


வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்களை வரவழைக்கலாம் அல்லது பள்ளிக்கு அருகில் உள்ள அரசு, உதவி பெறும் அல்லது தனியார் துவக்க மற்றும் நர்சரி பள்ளிகளை பயன் படுத்திக்கொள்ளலாம், என்றார். டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம், இந்திராணி, வளர்மதி, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment