JEE மெயின் தேர்வு: மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, February 13, 2021

JEE மெயின் தேர்வு: மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

 JEE மெயின் தேர்வு: மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?


2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு என்டிஏ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது


அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி மாதத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது:


*தேர்வுக்குச் செல்லும்போது மாணவர்கள் உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எவ்விதமான நகைகள், ஆபரணங்களையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.


*தேர்வு மையத்தில் மின்னணு கடிகாரங்கள் அனுமதிக்கப்படாது.


*மதச் சின்னங்களை அணியும் தேர்வர்கள் கேட் மூடும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தேர்வு மையத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.


தேர்வர்கள் மதச் சின்னங்கள் அல்லாது, தங்களது தலையைத் தொப்பி, துப்பட்டா போன்றவற்றால் மறைக்கக் கூடாது.


*கைப்பைகள், மின்னணுப் பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.


*உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.


*தொற்றுக் காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி மாணவர்கள் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர்களைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.


கூடுதல் விவரங்களைக் காண: jeemain.nta.nic.in.

No comments:

Post a Comment