வெப்சைட்டில் கற்றும் தரும் பிளஸ் 1 மாணவர் - Minnal Kalvi Seithi

Breaking

Monday, March 8, 2021

வெப்சைட்டில் கற்றும் தரும் பிளஸ் 1 மாணவர்

 வெப்சைட்டில் கற்றும் தரும் பிளஸ் 1 மாணவர்


தான் கற்றுத் தேர்ந்த பாடங்களை, பிற மாணவர்களுக்கும் கற்றுத்தருவதோடு, வேலைவாய்ப்புக்கான வழியையும் காட்டுகிறார், 11 ஆம் வகுப்பு மாணவர் அமெரிக்கா அனீஸ். காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் அனீஸ் கிருஷ்ணன் 17.


இவரது தந்தை கணேஷ்பாபு, தாயார் ஈஸ்வரி இருவருமே அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.சிறுவயதில் சென்னையில் தாத்தா வீட்டிற்கு வந்த அனீஸ் சென்னையில் படிப்பை தொடங்கி, தற்போது தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே பல்வேறு திறமைகள் கொண்ட அனீஸ், தான் கற்றதை மற்றவருக்கும் குறிப்பாக ஏழை மாணவர்களுக்கும் கற்றுத்தருவதற்கு தனியாக வெப்சைட் ஒன்றை தொடங்கி, பலவகையான கணினி பாடங்களையும் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.


இளைஞர்களுக்கு எந்த மாதிரியான டெக்னாலஜி தேவை, வேலைவாய்ப்புக்கு எது முக்கியம் என்பதை யோசித்து அதற்கான வழிமுறையை தருகிறார். இவரது, வெப்சைடில், தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள பல மாணவர்கள் கணினி பாடங்களை கற்று வருகின்றனர்.மேலும், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் புரோகிராம் நடத்தி வருகிறார். டேட்டா சயின்ஸ், புரோகிராமிங் லாங்குவேஜ் உட்பட பல்வேறு படிப்புகளையும், எப்படி படிக்க வேண்டும், அதன் பயன் என்ன என்பதை கற்றுத் தருகிறார்


அனீஸ் கூறுகையில்;இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பை தேடி அழைகின்றனர். எல்லா குழந்தையும் அறிவாளிகள் தான்.பாடங்களை சொல்லி கொடுக்கும் விதத்தில் தான் பாடங்களை அவர்கள் கற்பார்கள். சிறுவயது முதலே, பல்வேறு டிபேட், கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். பெற்றோர் சாப்ட்வேர் நிறுவனம்வைத்துள்ளதால், 7 வயதிலேயே சாப்ட்வேர், கோடிங் அனைத்தும் கற்றுக்கொண்டேன்.


பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, வெப்சைட் மூலம் யார் வேண்டுமானாலும் பாடங்களை கற்றுக்கொள்ளலாம். ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். இளைஞர்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு தேவையானவற்றை கற்றுக் கொடுத்து வேலைவாய்ப்பை உருவாக்குவதே எனது லட்சியம், என்றார்.தொடர்புக்கு 63698 69441

No comments:

Post a Comment