இந்த மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 19, 2021

இந்த மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவு

 இந்த மாநிலத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவு


பஞ்சாபில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31 வரை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பஞ்சாபில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இதனால் இன்று முதல் 2 வாரங்களுக்கு அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார் முதல்வர் அமரீந்தர் சிங். 


மருத்துவ கல்லூரிகளை தவிர அனைத்து கல்வி நிலையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார். மால்களில் 100 பேருக்கு மேல் எப்போதும் இருக்கக் கூடாது. சினிமா தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. 


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி கிடையாது. இறுதி சடங்குகள், திருமணங்களுக்கு 20 பேர் மட்டுமே அனுமதி போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இவை சனிக்கிழமை முதல் பஞ்சாபில் அமலுக்கு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு இதை கடைப்பிடித்து கொரோனா பரவும் சங்கிலியை உடைக்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.


 பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் இரவு 9 முதல் காலை 6 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வனிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல்களை மூடும்படி கூறியுள்ளனர். தினசரி பரிசோதனையை 35 ஆயிரமாக உயர்த்தும்படி உத்தரவிட்டுள்ளார் முதல்வர். பஞ்சாபில் தற்போது கொரோனா பாதித்தவர்களில் 40% பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment