அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 18, 2021

அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா

 அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா


தாம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சக ஆசிரியர்கள், மாணவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. 


தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு தாம்பரம், பாரத மாதா தெருவில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று மேலும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது


இதன் காரணமாக, மற்ற ஆசிரியர்களும், பெற்றோர்களும் பீதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, அந்த பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 ஆசிரியர்கள் செல்லும் வகுப்பிலுள்ள 60 மாணவ, மாணவியர்களுக்கு, தாம்பரம் நகராட்சி ஆணையர் சித்ரா உத்தரவின்பேரில்,  கொரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டது. 


மேலும், அந்த பள்ளிக்கு  மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னர்தான்,  மீண்டும் பள்ளி வழக்கம் போல செயல்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment