8 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 14, 2021

8 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

 8 மாவட்டங்களில்  கொரோனா தொற்று அதிகரிப்பு


தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட எட்டு மாவட்டங்களில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.


சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 257 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும், 67 ஆயிரத்து, 269 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 759 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


அதிகபட்சமாக, சென்னையில், 294 பேர்; கோவையில், 63 பேர்; செங்கல்பட்டில், 58 பேர்; தஞ்சாவூரில், 44 பேர்; திருவள்ளூரில், 42; திருப்பூரில், 33 பேர்; காஞ்சிபுரத்தில், 27 பேர்; ஈரோட்டில், 22 பேர் என, எட்டு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


இதுவரை, 1.82 கோடி மாதிரிகள் பரிசோதனையில், எட்டு லட்சத்து, 59 ஆயிரத்து, 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இவர்களில் நேற்று, 547 பேர் உட்பட, எட்டு லட்சத்து, 42 ஆயிரத்து, 309 பேர் குணமடைந்து, வீடு திரும்பியுளளனர்.தற்போது, சென்னையில், 1,979 பேர்; செங்கல்பட்டில், 397 பேர்; கோவையில், 396 பேர் என, மாநிலம் முழுதும், 4,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 தொற்றால் நேற்று நான்கு பேர் உட்பட, இதுவரை, 12 ஆயிரத்து, 547 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment