ஐ.டி., வளாகத்தில் ஆக்சிஜன் பூங்கா - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 28, 2021

ஐ.டி., வளாகத்தில் ஆக்சிஜன் பூங்கா

 ஐ.டி., வளாகத்தில் ஆக்சிஜன் பூங்கா


கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகளவு உள்ளிழுத்து, அதிக சுத்தமான காற்றை வெளியிடும், ஆக்சிஜன் பூங்கா, சென்னையை அடுத்துள்ள, சிறுசேரி சிப்காட் ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


நகர மயமாக்கல், வாகன போக்குவரத்து அதிகரிப்பு, தொழிற்சாலைகள் எண்ணிக்கை உயர்வு போன்றவற்றால், நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில், ஆக்சிஜன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சிப்காட் அதிகாரிகள் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம், சிறுசேரியில், 1,000 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் முன் பகுதியில் உள்ள, அரை ஏக்கர் திறந்தவெளி நிலத்தில், 15 லட்சம் ரூபாய் செல்வில், புதிய ஆக்சிஜன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது


கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகளவு உள்ளிழுத்து, ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் வகையில், முள் இல்லாத, 1,300 'பீமா மூங்கில்' மரங்கள் நடப்பட்டுள்ளன. இவை தினமும், 2 செ.மீ., வரை வளரும் தன்மை கொண்டவை.நடைபாதையின் இருபுறத்திலும் நடப்பட்டுள்ள இந்த மரங்களால், பூங்காவிற்குள் செல்லும்போதும், ஐ.டி., ஊழியர்கள், பொதுமக்கள் நடை பயிற்சி செயயும்போதும், சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment