பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 2, 2021

பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம்

 பெண் குழந்தை பிறப்பை கொண்டாடும் கிராமம்


ஐதராபாத்:தெலுங்கானா கிராமம் ஒன்றில், பெண் குழந்தைகள் பிறந்தால், பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கி, ஊர்வலம் நடத்தி, இனிப்பு வழங்கி விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உள்ளது.


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், சங்கா ரெட்டி மாவட்டத்தில், ஹரிதாஸ்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு, 300 குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்த மக்கள் தொகை, 1,200க்கு குறைவாகவே உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால், அதை மிக விமரிசையாக கொண்டாடுவதை கிராம பஞ்சாயத்து வழக்கமாக வைத்துள்ளது.


கிராம பஞ்சாயத்து கட்டடம், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன. பெண் குழந்தையின் பெற்றோருக்கு, சிறிய ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படுகிறது.கிராம மக்கள் ஒன்றிணைந்து, மேள தாளங்களுடன் நடனமாடி, கிராமத்தை ஊர்வலமாக சுற்றி வருகின்றனர்; இனிப்பு வழங்கப்படுகிறது.பிறந்த பெண் குழந்தையின் பெயரில், 1,000 ரூபாய் வங்கியில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது.


'பெண் குழந்தைகள், கிராமத்துக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கின்றனர். அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவே, இந்த வழக்கத்தை தொடர்கிறோம்' என, ஹரிதாஸ்பூர் கிராம பஞ்சாயத்து செயலர் ரோஹித் குல்கர்னி தெரிவித்தார்.

No comments:

Post a Comment