பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, March 16, 2021

பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு

 பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்: தமிழக அரசு உத்தரவு


பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. துறைரீதியாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்திய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.


கரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பான மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். 


மேலும், காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும், தகுதி வாய்ந்த நபர்களை அடையாளம் கண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தினார். 


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அரசு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தலைமை செயலர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment