வீட்டுக்கு அருகில் தேர்தல் பணி பள்ளி ஆசிரியைகள் எதிர்பார்ப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 4, 2021

வீட்டுக்கு அருகில் தேர்தல் பணி பள்ளி ஆசிரியைகள் எதிர்பார்ப்பு

 வீட்டுக்கு அருகில் தேர்தல் பணி பள்ளி ஆசிரியைகள் எதிர்பார்ப்பு


தேர்தல் பணியில் ஈடுபடும், பெண் அலுவலர்களுக்கு குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள, ஓட்டுச்சாவடி மையத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 


சட்டசபை தேர்தல் பணிகளுக்கு, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, ஆயிரத்து 300 பேரின் பட்டியல், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில், தேர்தல் பணிகள் சார்ந்த பயிற்சி வழங்கப்படும்


.ஓட்டுப்பதிவு நடக்கும் நாளுக்கு முந்தைய தினமே, ஓட்டுச்சாவடி மையத்தில், அலுவலர்கள் இருப்பது அவசியம். தேர்தல் முடிந்து, ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒப்படைத்த பிறகே, அலுவலர்கள் வீடு திரும்ப முடியும்.எனவே, பணிபுரியும் பள்ளியின் முகவரி அடிப்படையில் ஒதுக்காமல், குடியிருப்புக்கு அருகாமையில் ஓட்டுச்சாவடி மையத்தை ஒதுக்கினால், பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது. 


தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறுகையில், ''தேர்தல் பணி ஒதுக்கிய பிறகு, எந்த மாறுதலும் செய்யப்படுவ தில்லை. இப்பட்டியல் தயாரிக்கும் முன்பே, பெண் அலுவலர்களுக்கு, குடியிருப்பில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலோ அல்லது வேறு வார்டுகளிலோ ஒதுக்கலாம்


. ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒப்படைத்து வீடு திரும்ப, அதிகபட்சம் மூன்று நாட்களாகிவிடும். பாதுகாப்பு கருதி, அருகாமை ஓட்டுச்சாடிகளில், பணி ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, இப்பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment