நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - Minnal Kalvi Seithi

Breaking

Friday, March 12, 2021

நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

 நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு


மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது. 


நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


இதேபோல், 2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைப் சைன்ஸஸ் படிப்புகளுக்கும், ஆயுர் வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு நடத்தப்படும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. முன்னதாக எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது

No comments:

Post a Comment