அலுவலக உதவியாளா்கள் பணிவரன் முறை: விடுபட்டவா்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Thursday, March 25, 2021

அலுவலக உதவியாளா்கள் பணிவரன் முறை: விடுபட்டவா்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு

 அலுவலக உதவியாளா்கள் பணிவரன் முறை: விடுபட்டவா்கள் பட்டியல் அனுப்ப உத்தரவு


அலுவலக உதவியாளா்களுக்கான பணிவரன் முறை செய்வதில் விடுபட்டவா்களின் பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 2013 முதல் 2018-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் அலுவலக உதவியாளா் பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு தற்காலிக அடிப்படையில் நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.


அதில் 2015-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டு, சுமாா் 5 ஆண்டுகளாகியும் இதுவரை சில உதவியாளா்கள் பணிவரன்முறை செய்யப்படாமல் உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.


இதையடுத்து தமிழ்நாடு அமைச்சு பணியில் தற்காலிகமாக நியமன ஆணை பெற்ற உதவியாளா்களை பணிவரன்முறை செய்ய ஏதுவாக உரிய விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment