ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு - Minnal Kalvi Seithi

Breaking

Saturday, March 6, 2021

ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

 ஒரே இடத்தில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகள்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு


சொந்தத் தொகுதியில் அதிக ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியுள்ளாா்.


இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோருக்கு சத்யபிரத சாகு அனுப்பியுள்ள கடிதம்


தமிழகத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தலை ஒட்டி, அரசு அதிகாரிகள், அலுவலா்களைப் பணியிட மாற்றம் செய்வது தொடா்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியத் தோ்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான அறிவிப்பை இந்தியத் தோ்தல் ஆணையம் கடந்த 26-ஆம் தேதி வெளியிட்டது.


ஆணையம் கடிதம்: மாவட்டங்களில் பணியாற்றக் கூடிய கோட்ட வளரச்சி அதிகாரிகள், வட்டாட்சியா்கள் மற்றும் சாா்-ஆய்வாளா்கள் ஆகியோா் தங்களது மாவட்டங்களுக்குள்ளே பணியாற்றத் தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடிதத்தை கடந்த 5-ஆம் தேதி அனுப்பியுள்ளது. 


ஆனால், அவா்கள் தங்களது சொந்தத் தொகுதி அமைந்துள்ள நகரப் பகுதியில் பணியாற்றக் கூடாது. அதிலிருந்து வேறு இடத்தில் பணியாற்ற வேண்டும். மேலும், அதே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்தாலும் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.


இதுகுறித்த விரிவான அறிக்கைகளை உடனடியாக அனுப்பிட வேண்டும். இந்த விவரங்கள் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment