உயிரியல், வேதியியல் தேர்வுகளுக்கு கூடுதல் விடுப்பு நாள் தர கோரிக்கை - Minnal Kalvi Seithi

Breaking

Wednesday, March 3, 2021

உயிரியல், வேதியியல் தேர்வுகளுக்கு கூடுதல் விடுப்பு நாள் தர கோரிக்கை

 உயிரியல், வேதியியல் தேர்வுகளுக்கு கூடுதல் விடுப்பு நாள் தர கோரிக்கை


பிளஸ்2 பொது தேர்வு அட்டவணையில், உயிரியல், வேதியியல் உட்பட ஐந்து பாடங்களுக்கு, விடுமுறை நாட்களை அதிகரிக்க வேண்டும் என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக பள்ளிக் கல்வி பாட திட்டத்தின்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ல் பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அட்டவணை, பிப்., 17ல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, மே 21 வரை நடத்தப்படுகிறது.அதில், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், தாவரவியல், கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகளுக்கு, மாணவர்கள் தயாராக ஒரு நாள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதாவது, 17ம் தேதி சில பாடங்களுக்கு தேர்வு முடிந்து, ஒரு நாள் விடுப்புக்கு பின், 19ல் உயிரியல், வரலாறு, தாவரவியல் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதையடுத்து, ஒரு நாள் விடுப்புக்கு பின், வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த பாடங்களின் மதிப்பெண்கள், பிளஸ் 2 படிப்போர், 'நீட்' தேர்வு மாணவர்கள், வணிக படிப்பு மேற்கொள்ள உள்ள மாணவர்கள் மற்றும் இன்ஜினியரிங் சேர்வோருக்கும் முக்கிய பாடங்களாக உள்ளன


எனவே இந்த பாடங்களுக்கு தேர்வு நடத்தும் முன், கூடுதலாக ஒரு நாள் விடுப்பு அளித்தால், மாணவர்கள் கூடுதல் நேரம் செலவிட்டு தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்த பின் தேர்வு நடத்துவதால், மாணவர்களின் நலன் கருதி, இந்த தேர்வுகளுக்கான நாட்களை மாற்ற, அரசு தேர்வு துறை பரிசீலிக்கலாம் என, மாணவர்களும், பெற்றோரும் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment