வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 13, 2021

வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய இன்று கடைசி நாள்

 வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய  இன்று கடைசி நாள்


மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய, 'ஆன்லைன்' பயன்பாடு தெரியாதவர்களுக்காக நடத்தப்படும் முகாம், இன்றுடன் நிறைவடைகிறது. 


இன்று கடைசி நாள் என்பதால், முதன்முறை வாக்காளர்களுக்கு உதவ, ஓட்டுச்சாவடிகளில், அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், மொபைல் போனுடன் செல்வது அவசியம்.


தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடித்து, ஜன., 20ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்காக, ஒரு மாதம் நடந்த சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 21 லட்சத்து, 82 ஆயிரத்து, 120 பேர், விண்ணப்பித்தனர்.இதில், 21 லட்சத்து, 39 ஆயிரத்து, 395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, அவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 


‌ நடவடிக்கை ‌


புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு, விரைவு தபாலில் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை,


 voterportal.eci.gov.in 


என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.


பதிவிறக்கம் செய்ய, ஆன்லைன் பயன்பாடு தெரியாதவர்களுக்காக, 30 ஆயிரத்து, 400 இடங்களில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.


அதன்படி, நேற்று முகாம் துவங்கியது. முகாமில் ஏராளமானோர் பங்கேற்று, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டனர். இம்முகாம், இன்று  நிறைவடைகிறது.


‌ 'பிரின்ட் அவுட்' ‌


வாக்காளர் பட்டியலில், முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள், இந்த முகாமை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை, தங்கள் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.பதிவிறக்கம் செய்த மின்னணு வாக்காளர் அட்டையை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, ஓட்டு போட பயன்படுத்தலாம் என்பதால், புதிய வாக்காளர்கள் எல்லாரும், இந்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்றும், அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.

No comments:

Post a Comment