மொபைல் ஆப் ஐ.டி.,யில் அறிமுகம் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, March 16, 2021

மொபைல் ஆப் ஐ.டி.,யில் அறிமுகம்

 மொபைல் ஆப் ஐ.டி.,யில் அறிமுகம்


தேர்தல் பணிக்காக, முதல் முறையாக, 'மொபைல் போன் ஆப்' எனும் செயலி உருவாக்கப்பட்டு உள்ளதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:


சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைப்பதற்காக, முதல் முறையாக, தேர்தல் பணிக்கான, புதிய செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி உருவாக்கும் பணி, இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி, தற்போது பரிசோதனை அடிப்படையில், அமலில் உள்ளது. 


தேர்தல் கமிஷனர், வருமான வரி, ஜி.எஸ்.டி.,அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள் உட்பட, அனைத்து அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து, தகவல்களை பறிமாறுவதற்காக, இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் ஒவ்வொருவரும், தினமும் அறிக்கை தாக்கல் செய்வதற்கான வசதிகளும், இதில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு முன், இதுபோன்ற செயலி உருவாக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment