தேர்தல் பயிற்சிக்கு வந்தவர்கள் உணவுக்கு கையேந்திய அவலம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 28, 2021

தேர்தல் பயிற்சிக்கு வந்தவர்கள் உணவுக்கு கையேந்திய அவலம்

 தேர்தல் பயிற்சிக்கு வந்தவர்கள் உணவுக்கு கையேந்திய அவலம்


பல்லாவரம் தொகுதியில், தேர்தல் நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் நேரத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 


பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, பயிற்சி வகுப்பு முடிந்தும், மதிய உணவு சரியான நேரத்திற்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.


 இதனால் பலர் பசியோடு காத்திருந்தனர். ஒரு சிலர் வெளியில் சென்று ஓட்டலில் உணவருந்திய நிலையில், பலர் உணவு வரும் என்று பிற்பகல் 3 மணிவரை நீண்ட நேரமாக காத்திருந்தனர்.


பின்னர் மூன்று மணிக்கு மேல் ஒரு வழியாக உணவு வந்த நிலையில், அதனை பெறுவதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் சென்றனர். 


இதனால் அங்கு உணவுக்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முந்தியவர்கள் உணவை பெற்றுச் சென்ற நிலையில், இயலாதவர்கள் பலர் உணவுக்காக கையேந்தி நின்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வருவாய்த் துறை அலுவலர்களின் முறையற்ற ஏற்பாடு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக வந்திருந்தவர்கள் குற்றம்சாட்டினர்

No comments:

Post a Comment